மாவட்ட செய்திகள்

சேலத்தில்பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி + "||" + In Salem Two girls have attempted suicide

சேலத்தில்பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி

சேலத்தில்பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி
சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
சேலம், 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


சேலம் உடையாப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஒரு மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி, தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கி சென்றதாகவும், ஆனால் அந்த சான்றிதழை அவர் திடீரென தொலைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த மற்றொரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக மாணவி படிக்காததால், அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மாணவி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. மகனை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி மனைவி, மைத்துனர் படுகாயம்
புனே அருகே மகனை குத்திக் கொன்ற வாலிபர் தனது மனைவி, மைத்துனரையும் தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்றார்.
3. திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலைக்கு முயன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. ஜெயங்கொண்டத்தில் மின்சாரம் வழங்கக்கோரி குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
ஜெயங்கொண்டத்தில் மின்சாரம் வழங்கக்கோரி குடும்பத்துடன் விவசாயி தற்கொலைக்கு முயன்றார். மின்சாரம் வழங்க கூடாது என்று கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. அணைக்கரை செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி விட்டு விபரீத முடிவு
அணைக்கரை செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸ் காரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார்.