மாவட்ட செய்திகள்

திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம் + "||" + Maha Kaliamman Temple Festival near Thirumanur is a sight of many devotees

திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
திருமானூர் அருகே புதுக்கோட்டை மகா காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடந்த திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து மகா காளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு மகா காளியம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. இதையடுத்து தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகை அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2. பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4. தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5. நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் அருகே நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.