மாவட்ட செய்திகள்

கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி + "||" + BJP MLAs will not quit

கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி

கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்–மந்திரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

ஆபரே‌ஷன் தாமரையை கையில் எடுத்துள்ளோம் என்று நாங்கள் கூறவில்லை. அவர்கள்காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) ‘ரிவர்ஸ்’ ஆபரே‌ஷன் (பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுப்பது) செய்வதாக இருந்தால் செய்யட்டும்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். சட்டசபை கூட்டத்தின்போது, இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் பேச்சுக்கே இடம் இல்லை.

நாங்கள், காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. சட்டசபை கூட்டம் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் என்னென்ன பிரச்சினைகளை கிளப்ப வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துவேன்.  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் ; கர்நாடக அரசியலில் பரபரப்பு
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் ரகசிய கூட்டத்தை நடத்தினர்.
2. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
3. காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை எனும் கூற்று, மராட்டிய அரசியல் களத்தில் வலுவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
4. உண்மை வெற்றி பெற்றுள்ளது: ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக கருத்து
ரபேல் வழக்கில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5. இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது, அதில் தங்கம் இருக்கு! கண்டுபிடித்த பாஜக தலைவர்
இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது தெரியுமா? அதில் தங்கம் இருக்கு என்று மேற்கு வங்காள பாஜக தலைவர் கூறி உள்ளார்.