மாவட்ட செய்திகள்

போலீஸ் நிலையம் முன்புடிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 பேர் கைது + "||" + Before the police station Three arrested for taking video on tick-tock processor

போலீஸ் நிலையம் முன்புடிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 பேர் கைது

போலீஸ் நிலையம் முன்புடிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 பேர் கைது
போலீஸ் நிலையம் முன்பு டிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 20). அதேபகுதியை சேர்ந்தவர் 18 வயது வாலிபர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிதடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது ஆதிகேசவன், அவருடைய நண்பர் மற்றும் இவர்களுடன் வந்த 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் போலீஸ் நிலையம் முன்பு செல்போனில் படம் பிடித்து டிக்-டாக் செயலியில் வெளியிட்டனர். இதுதொடர்பாக கேட்ட போலீஸ் ஏட்டுவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராசிபுரம் அருகே, துப்பாக்கியுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் போலீசில் சரண்
ராசிபுரம் அருகே துப்பாக்கியுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது - 25 கிலோ பறிமுதல்
கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
3. வாடகை தருவதாக கூறி கார்களை கடத்தி விற்று வந்த 3 பேர் கைது - 32 கார்கள் பறிமுதல்
மாதவாடகை தருவதாக கூறி கார்களை கடத்தி விற்று வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும்அவர்களிடம் இருந்து 32 கார்களை பறிமுதல் செய்தனர்.
4. சேலத்தில், மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது - 162 பாட்டில்கள் பறிமுதல்
சேலத்தில் மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 162 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. நாமக்கல்லில், மடிக்கணினி திருடிய 3 பேர் கைது
நாமக்கல்லில் மடிக்கணினி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...