மாவட்ட செய்திகள்

கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைப்பு போலீசார் விசாரணை + "||" + Government of Tamil Nadu on the Kerala border Police are investigating the reception entrance stupa breaking

கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைப்பு போலீசார் விசாரணை

கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைப்பு போலீசார் விசாரணை
களியக்காவிளையில் அருகே கேரள எல்லையில் தமிழக அரசின் வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைத்து சேதப்படுத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை,

தமிழகத்தின் தென் பகுதி எல்லையில் களியக்காவிளை உள்ளது. களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லை பகுதியில் சோதனைச்சாவடியும், தமிழக அரசு சார்பில் அரசின் சின்னத்துடன் நுழைவு ஸ்தூபியும் வரவேற்பு பலகையும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரள பகுதி தொடங்கும் இடத்தில் கேரள அரசு சார்பில் நுழைவு ஸ்தூபியும், வரவேற்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் எல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு நுழைவு ஸ்தூபி உடைந்து சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சமூக விரோதிகளா?

இதற்கிடையே தமிழக அரசின் வரவேற்பு ஸ்தூபி சேதம் அடைந்து கிடப்பதை சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.

இதனால், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக விரோதிகளின் செயலாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கேமரா காட்சி

அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவில் களியக்காவிளையில் இருந்து கேரளா நோக்கி சிமெண்டு கலவை ஏற்றிச் சென்ற லாரியை டிரைவர் திருப்ப முயன்றபோது தமிழக அரசின் ஸ்தூபி மீது மோதி சேதமடையும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த காட்சியை கைப்பற்றி ஸ்தூபியை சேதப்படுத்திய லாரி யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சேதமடைந்த தமிழக அரசின் ஸ்தூபியை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை
குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை.
2. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கன்னியாகுமரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்? போலீசார் விசாரணை
கன்னியாகுமரி அருகே வடக்கு தாமரைகுளம் பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. என்.ஜி.ஓ. காலனி அருகே 10–ம் வகுப்பு மாணவன் கடத்தல் போலீசார் விசாரணை
நாகர்கோவில் அருகே 10–ம் வகுப்பு மாணவனை கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.