மாவட்ட செய்திகள்

தொடர் கனமழைபெங்களூரு - கோவா மலைப்பாதையில் மண்சரிவுநின்ற லாரி மீது மரங்கள் விழுந்து அமுக்கியதில் டிரைவர் படுகாயம் + "||" + Continuous Heavy Rain Landslide on the Bengaluru-Goa highway

தொடர் கனமழைபெங்களூரு - கோவா மலைப்பாதையில் மண்சரிவுநின்ற லாரி மீது மரங்கள் விழுந்து அமுக்கியதில் டிரைவர் படுகாயம்

தொடர் கனமழைபெங்களூரு - கோவா மலைப்பாதையில் மண்சரிவுநின்ற லாரி மீது மரங்கள் விழுந்து அமுக்கியதில் டிரைவர் படுகாயம்
உத்தர கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கோலா அருகே பெங்களூரு - கோவா மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
பெங்களூரு, 

உத்தர கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கோலா அருகே பெங்களூரு - கோவா மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது மலைப்பாதையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மண், மரங்கள், செடி-கொடிகள் விழுந்து அமுக்கியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தொடர் கனமழை

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூரு, மைசூரு உள்பட கர்நாடக தென்மாவட்டங்களைத் தவிர கடலோர மாவட்டங்களிலும், வடகர்நாடக மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டமான உத்தர கன்னடா மாவட்டத்தில் இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் தொடர் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் அந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே உத்தர கன்னடா மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு

இந்த நிலையில் நேற்று மதிய வேளையில் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா அருகே பெங்களூரு - கோவா மலைப்பாதையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த மலைப்பாதைதான் பெங்களூரு - கோவாவுக்கு இடையேயான முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நிலையில் திடீரென டிரைவர் அச்சாலையில் உள்ள ஒரு மலையோரத்தில் லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் சாலையோரம் இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் லாரி டிரைவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையை ஆக்கிரமித்தது. மலையில் இருந்த மரங்களும், செடி-கொடிகளும் வேரோடு சரிந்து சாலையில் வந்து விழுந்தன. மேலும் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீதும் மண், மரங்கள், செடி-கொடிகள் ஆகியவை விழுந்து அமுக்கின. இதில் லாரி கவிழ்ந்தது. லாரியின் அடியில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதைப்பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அங்கோலா தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சாலையில் கிடந்த மண், மரங்கள், செடி-கொடிகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர்.

அதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து சீரடைந்தது. இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உத்தர கன்னடா மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.