மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் வாங்கரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது + "||" + Inside the train station ticket counter Youth arrested for stealing money

போதைப்பொருள் வாங்கரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது

போதைப்பொருள் வாங்கரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது
போதைப்பொருள் வாங்குவதற்காக டாக்யார்டு ரோடு ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

போதைப்பொருள் வாங்குவதற்காக டாக்யார்டு ரோடு ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்து பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பணம் திருட்டு

மும்பை மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் டாக்யார்டு ரோடு ரெயில் நிலையம் உள்ளது. சம்பவத்தன்று காலை டிக்கெட் கவுண்ட்டரில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தார். இதில் அந்த கவுண்ட்டரில் உள்ள டிராயரில் பணம் காணாமல் போனதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த டிராயரில் ரூ.3 ஆயிரத்து 800 திருட்டு போனதாக தெரிகிறது. பின்னர் இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் வாலிபர் ஒருவர் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டரில் உள்ள ஜன்னல் வழியாக புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வடலா ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் காட்டன்கிரீன் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் ராதோட் (வயது 25) என்பது தெரியவந்தது. இதில் அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போதைப்பொருள் வாங்குவதற்கு பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது.