மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில்ரூ.2¼ கோடி ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது வழக்கு + "||" + In the company of Krishnagiri Aw Ru2 crore cheating case against the private company

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில்ரூ.2¼ கோடி ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில்ரூ.2¼ கோடி ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது வழக்கு
கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் ரூ.2¼ கோடி ஏமாற்றிய தனியார் பால் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் ரோட்டில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பு சங்கம் (ஆவின்) இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில், கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பால் நிறுவனம் 3 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 39 ரூபாய்க்கு பால் மற்றும் பால் பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் ரூ.1 கோடி மட்டும் செலுத்தினார்கள். மீதம் உள்ள பாக்கித்தொகையை கிருஷ்ணகிரி கூட்டுறவு பால் தயாரிப்பு சங்கத்திற்கு திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க பொது மேலாளர் ஜெயசந்திரன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதில் தனியார் பால் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் செல்வகுமார், சுமதி, பொது மேலாளர் வேலவன் ஆகிய 3 பேர் மீது புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அவர்கள் ரூ. 2 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 39-ஐ தங்கள் ஆவின் நிறுவனத்திற்கு திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.