மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு - தக்கலை அருகே பரிதாபம் + "||" + Love married Tukkuppottu die young - Awful near Takalai

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு - தக்கலை அருகே பரிதாபம்

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு - தக்கலை அருகே பரிதாபம்
தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே குமாரகோவில் இளங்கடை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பதாஸ் (வயது 34), கொத்தனார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

திருமணம் முடிந்த பின் அய்யப்பதாஸ் கேரளாவில் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். அப்போது, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த வேலையை விட்டு விட்டு உள்ளூரிலேயே அய்யப்பதாஸ் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அய்யப் பதாஸ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். இதன் பிறகும் கணவன், மனைவி இடையிலான பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சின்ன விஷ யம் கூட அவர்களுக் கிடையே பெரிய பிரச்சினை யாக உருவெடுத்தது.

இதனால் கோபித்து கொண்டு ஐஸ்வர்யா, தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி யின் இந்த செயலால் அய்யப்பதாஸ் மிகவும் மன முடைந்த நிலையில் காணப் பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அய்யப்ப தாஸ் வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப் படாமல் இருந்தது. அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த அய்யப் பதாசின் தாயார் நாகவள்ளி, இதனை கவனித்து வீட்டின் கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து அய்யப்பதாஸ் கதவை திறக்க வில்லை.

சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, அங்கு அய்யப் பதாஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அவர் கதறி அழுதார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண் டனர். பின்னர் தற்கொலை குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டம் - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாமியாா் புகார்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக மாமியார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
2. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே காதல் மனைவி கர்ப்பமாக இருக்கும்நிலையில், அவருடன் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக் தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
3. நெல்லையில் காதல் திருமணம் செய்த, புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை - ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு
நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மனைவியின் அண்ணன்-உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
5. காதல் திருமணம் செய்த ஒரு ஆண்டில்: கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? தீவிர விசாரணை
கதக் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு ஆண்டில் கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.