மாவட்ட செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,500 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + The farmers' union, which was involved in the struggle to free water in Kaveri, has filed a case against 1,500 people

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,500 பேர் மீது வழக்குப்பதிவு

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,500 பேர் மீது வழக்குப்பதிவு
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 1,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர்,

நடப்பு ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரமில்லாத காவிரி ஆணையம், மத்திய அரசு தமிழகத்தை அலட்சியப்படுத்தி வஞ்சித்து வருகிறது. இதனால் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்துள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்றுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.

1,500 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், கொரடாச்சேரி, திருமக்கோட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட திருவாரூர் மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாசிலாமணி, உலகநாதன், செல்வராஜ், பாஸ்கர் உள்பட 1,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.