மாவட்ட செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகேகார் கவிழ்ந்து அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு + "||" + Near Nellikuppam Car topples ADMK Former Councilor Saw

நெல்லிக்குப்பம் அருகேகார் கவிழ்ந்து அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு

நெல்லிக்குப்பம் அருகேகார் கவிழ்ந்து அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு
நெல்லிக்குப்பம் அருகே கார் கவிழ்ந்து அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம், 

பண்ருட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆயுள்ரமே‌‌ஷ் (வயது 48). அ.தி.மு.க.வில் மாவட்ட மாணவர் அணி தலைவராகவும், பண்ருட்டி நகரசபை முன்னாள் கவுன்சிலராகவும் இருந்தார். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை இவர், பண்ருட்டியில் இருந்து தனது காரில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை, ஆயுள்ரமேசே ஓட்டி வந்தார். அப்போது நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு கஸ்டமஸ் சாலையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து அங்குள்ள வயல்வெளி பகுதிக்குள் கார் கவிழ்ந்து பல்டி அடித்தது. இதில் காரின் இடிபாட்டிற்குள் சிக்கி கொண்ட ஆயுள்ரமே‌‌ஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஆயுள்ரமேசை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு பிணமாக கிடந்த ஆயுள்ரமேசின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு பண்ருட்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் நேரில் வந்து, ஆயுள்ரமேசின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.