மாவட்ட செய்திகள்

தானே ரெயில் நிலையத்தை சீரமைக்க வேண்டும்சிவசேனா எம்.பி. வலியுறுத்தல் + "||" + Thane Railway Station To be revamped Shiv Sena MP Emphasis

தானே ரெயில் நிலையத்தை சீரமைக்க வேண்டும்சிவசேனா எம்.பி. வலியுறுத்தல்

தானே ரெயில் நிலையத்தை சீரமைக்க வேண்டும்சிவசேனா எம்.பி. வலியுறுத்தல்
தானே ரெயில்நிலையத்தை சீரமைக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
தானே,

தானே ரெயில்நிலையத்தை சீரமைக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

எம்.பி. கோரிக்கை

சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே தானே எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 30-ந் தேதி தானே ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது 50 ஆண்டுகளாக பழமையான ரெயில்நிலைய கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததை பார்த்து உள்ளார்.

இந்தநிலையில் அவர் தானே ரெயில்நிலையம் சீரமைப்பு பணிகள் தொடர்பாக ரெயில்வே மந்திரியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

சீரமைக்க வேண்டும்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே நிர்வாகம் தானே ரெயில்நிலையத்தில் தற்காலிக முன் எச்சரிக்கை பணிகளை மட்டுமே செய்து வருகிறது. மோசமான நிலையில் உள்ள தானே ரெயில் நிலையத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். பயணிகளுக்கு நவீன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.