மாவட்ட செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் + "||" + Cauvery Farmers' Association meeting to decide on Chennai-Salem 8 road project

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோட்டூர்,

கோட்டூர் அருகே இருள்நீக்கியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். திருவாருர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தென்மேற்கு பருவமழை இதுவரையில் உரிய அளவில் உரிய காலத்தில் பெய்யவில்லை. இந்தநிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதிக்குள் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்க வேண்டும். கோடை சாகுபடி செய்ய உழவு மானியம், தண்ணீர் இரைக்க ஆயில் என்ஜின்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். தேவையான தரமான நெல் விதைகள் முழு மானியத்தில் பாகுபாடின்றி வழங்க வேண்டும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.

முற்றுகை போராட்டம்

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், 26-ந்தேதி முற்றுகை போராட்டமும் டெல்லி நாடாளுமன்றம் முன்பு நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில கவுரவ தலைவர் நீலன்.அசோகன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மண்டல தலைவர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நில உரிமையை பாதுகாக்கக்கோரி சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேர் கைது
நில உரிமையை பாதுகாக்கக்கோரி கரூரில் சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அரசு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் பா.ஜ.க.தொழிற்சங்க செயற்குழுவில் தீர்மானம்
அரசு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் பா.ஜ.க.தொழிற்சங்க செயற்குழுவில் தீர்மானம்.
3. திருவெண்காடு அருகே ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விரட்டி அடித்த விவசாயிகள்-பரபரப்பு
திருவெண்காடு அருகே குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விவசாயிகள் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4. கொள்ளிடம் தண்ணீர் கடைமடை வரை வராததால் விவசாயிகள் தவிப்பு
கொள்ளிடம் தண்ணீர் கடைமடை பகுதி வரை வராததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
5. விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் - மயிலாடுதுறையில், எச்.ராஜா பேட்டி
விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் என்று தவறான தகவல் பரப்பப்படுவதாக மயிலாடுதுறையில், எச்.ராஜா கூறினார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மயிலாடுதுறையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-