மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது + "||" + Kidnapping and harassment a woman; Driver arrested

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண் தனது 5 வயது மகளுடன் கடந்த 4-ந் தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது கணவர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்யும் வடக்கு மாமல்லபுரம் அண்ணல் காந்தி தெருவை சேர்ந்த சரவணன் என்கிற ஸ்கைலப் (40) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளை கடத்தி சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையில், சரவணன் கன்னியாகுமரி, கேரள மாநிலம் கோவளம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரிலும் கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது.

அப்போது சரவணன் அந்த பெண்ணுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் பெண்ணிடம் இருந்த ¼ பவுன் மோதிரத்தையும் விற்றார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சரவணன் எப்போதும் தாடியுடன் காணப்படும் அவர் தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் மொட்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் மதுராந்தகத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்பு கடத்தப்பட்ட தாய், குழந்தையை மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது
மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது; 4 லாரிகள் பறிமுதல்
கொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது
வையம்பட்டி அருகே இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கியது: இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது
திருச்சி சமயபுரம் போலீசாரால் துப்பு துலங்கப்பட்டு, இளம்பெண்ணை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போர்வையில் இளம்பெண்களை வைத்து விபசாரம்
சேலம் பெரமனூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து கணவன்-மனைவி போர்வையில் விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை