மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம் + "||" + Sudden struggle of students asking for a laptop

மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம்

மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம்
மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குழித்துறை,

தமிழக அரசு சார்பில் பிளஸ்– 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் பகுதியில் கடந்த ஆண்டு பிளஸ் –2 படித்த மாணவ– மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மாணவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் நேற்று மார்த்தாண்டம் வெட்டுமணியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்களிடம்  தங்களின் கோரிக்கையை எழுத்து பூர்வமாக கல்வி அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. நொய்யல் அருகே தேங்காய் நார் ஆலையை பொதுமக்கள் முற்றுகை
நொய்யல் அருகே தேங்காய்நார் ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
2. கடலூர், சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கடலூர், சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
3. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில், காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
4. நெல்லிக்குப்பத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் நிர்வாகி சாவு
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி மயங்கி விழுந்து இறந்தார்.
5. திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 போ் கைது
திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை