மாவட்ட செய்திகள்

பாண்டுப்பில்ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலைகாரணம் என்ன? போலீஸ் விசாரணை + "||" + In pantup Graduate girl commits suicide by jumping in front of train What is the reason? Police are investigating

பாண்டுப்பில்ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலைகாரணம் என்ன? போலீஸ் விசாரணை

பாண்டுப்பில்ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலைகாரணம் என்ன? போலீஸ் விசாரணை
பாண்டுப்பில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,

மும்பை பாண்டுப் துள்சிபாடாவை சேர்ந்த இளம்பெண் யோகிதா (வயது25). பட்டதாரி பெண்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை 11.45 மணி அளவில், யோகிதா பாண்டுப் ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதை கண்ட அவர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதனால் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே யோகிதா பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர். இந்தநிலையில், ரெயில் முன் குதித்து மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அறிந்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், தண்டவாளம் அருகே தற்கொலை கடிதம் எதும் உள்ளதா என தேடி பார்த்தனர். கடிதம் எதுவும் சிக்கவில்லை. பட்டதாரி பெண்ணான அவர் வேலை தேடி வந்துள்ளார். வேலை கிடைக்காத விரக்தியில் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது அவரது தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை