மாவட்ட செய்திகள்

ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு + "||" + Pretending to be an astrologer, a 9-pound chain robbery has 2 people

ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு

ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு
திருமக்கோட்டை அருகே ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர் ராஜாதெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது35). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செவ்வந்தி (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. நேற்று 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் செவ்வந்தியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களிடம், செவ்வந்தி தனக்கு குழந்தை இல்லை என்று கூறி உள்ளார்.

இதையடுத்து 2 பேரும், ஜாதகம் பார்ப்பது போல் நடித்து, ‘உங்களுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது, ஆதலால் கழுத்தில் அணிந்துள்ள சங்கிலியை கழற்றி தாருங்கள். சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து தருகிறோம்’ என கூறினர்.

9 பவுன் சங்கிலி

இதை நம்பிய செவ்வந்தி தனது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்தார். அந்த சங்கிலியை வாங்கி கொண்ட 2 பேரும் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து விட்டு திரும்ப கொண்டு வருகிறோம் என கூறி விட்டு தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் திரும்ப வரவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் 2 பேரும் ஜோதிடர்கள் போல் நடித்து 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வந்தி, திருமக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளி போலீசார் வலைவீச்சு
ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறு காரணமாக காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி தொழிலாளிக்கு வலைவீச்சு
தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலியானாள். விபத்தை ஏற்படுத்திய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கோவில் கதவை உடைத்து சிலைகளை திருட முயற்சி மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுப்பேட்டை அருகே கோவில் கதவை உடைத்து சிலைகளை திருட முயன்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
4. மயிலாடுதுறையில் பயங்கரம்: இசைக்கலைஞர் வெட்டிக்கொலை உறவினர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் இசைக்கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. விழுப்புரத்தில் பயங்கரம் இளம்பெண் கற்பழித்து கொலை முகத்தை சிதைத்து சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.