மாவட்ட செய்திகள்

திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி + "||" + Motorcycles collide; 2 people Kills

திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி

திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

திருத்தணி,

திருத்தணியில் உள்ள சித்தூர் சாலை குண்டுலூர் பகுதியை சேர்ந்தவர் கபாலீஸ்வரன் (வயது 34). இவர் நேற்றுமுன்தினம் இரவு சொந்தவேலை காரணமாக வெளியில் சென்று விட்டு திருத்தணி பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருத்தணியை அடுத்த வேலஞ்சேரியை சேர்நதவர் வெங்கடேசன் (வயது 25).

இவர் திருத்தணியில் தனது வேலைகளை முடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருத்தணியில் உள்ள பைபாஸ் சாலையில் வரும் போது அவர்களது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் கபாலீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம்
வேலூர் அருகே அதிக போதைக்காக மதுவில் கொக்கு மருந்து கலந்து குடித்தவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 9 பேர் பலி
மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
3. அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 2 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டோன் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய்குமார் கோயல்முடி (வயது 23) மற்றும் தேஜா கவுசிக் (22) ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.
4. ஆத்தூர் அருகே, கார் கவிழ்ந்தது: தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் விபத்தில் பலி - தாயார் உள்பட 3 பேர் படுகாயம்
ஆத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். தாயார் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப் பட்டதாவது:-
5. தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பலி 7 பேர் படுகாயம்
தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.