மாவட்ட செய்திகள்

பாபநாசம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது + "||" + Farmer near Papanasam arrested for cutting a sickle

பாபநாசம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது

பாபநாசம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது
பாபநாசம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள தேவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது55).விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(40). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மகாலிங்கம் தனது மகள் சுமத்ராவுடன்(37) அதே கிராமத்தில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது பிரகாஷ் அவரது நண்பர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம் ஆகிய 3 பேரும் சேர்ந்து மகாலிங்கத்தை அரிவாளால் தலையில் வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த மகாலிங்கம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மகாலிங்கத்தின் மகள் சுமத்ரா கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், முருகானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள புண்ணியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை