மாவட்ட செய்திகள்

குமாரபாளையத்தில்விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிதாய் பலியான பரிதாபம் + "||" + In kumarapalaiyat Suicide attempt with keyword owner family Mother sacrificing pity

குமாரபாளையத்தில்விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிதாய் பலியான பரிதாபம்

குமாரபாளையத்தில்விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிதாய் பலியான பரிதாபம்
குமாரபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் விஷம் குடித்த தாய் பரிதாபமாக இறந்தார்.
குமாரபாளையம், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், வி.எம்.எஸ். சுந்தரம் காலனியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் வேணுகோபால் (வயது35). இவருடைய மனைவி மேகலா (31). இவர்களுடைய மகன் மித்ரன்(3).

வேணுகோபால் கடந்த 2 ஆண்டுகளாக விசைத்தறி கூடம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். விசைத்தறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவர் கடன் தொல்லையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையே வேணுகோபாலின் தந்தை மனோகர் நேற்று காலை 7 மணியளவில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது மனோகரின் மனைவி சுவர்ணலதா(56), அவரது மகன் வேணுகோபால், மருமகள் மேகலா (31), பேரன் மித்ரன்(3) ஆகிய 4 பேரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகர் உடனடியாக அவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சுவர்ணலதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வேணுகோபால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், இதில் அவரது தாய் சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கையை வெட்டி தற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்
கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
2. திண்டிவனம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
திண்டிவனம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை
கணவர் பிரிந்து சென்ற நிலையில், தொழிலாளி ஒருவருடன் தொடர்பு படுத்தி நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால், பெண் உள்பட 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.
4. திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.