மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் – வேன் மோதல்; தனியார் நிறுவன பொதுமேலாளர் பலி + "||" + Motorcycle - van collision; Private company general manager kills

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் – வேன் மோதல்; தனியார் நிறுவன பொதுமேலாளர் பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் – வேன் மோதல்; தனியார் நிறுவன பொதுமேலாளர் பலி
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்– வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பொதுமேலாளர் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பூங்காநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 52). இவர் காக்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பிரகாஷ் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு காக்களூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பிரகாஷ் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.