மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு + "||" + The rifle from the parcel was trying to send a flight from Chennai to Delhi

சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு

சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு
சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் அனுப்ப இருந்த பார்சல்களை விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஸ்கேன்’ செய்தனர்.

அப்போது ஒரு பார்சலில் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பார்சலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த பார்சலை ஆய்வு செய்தபோது சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஒருவருக்கு அந்த பார்சலை அனுப்பி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து துப்பாக்கி பார்சலை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், துப்பாக்கி பார்சலை அனுப்பிய கூரியர் நிறுவன அதிகாரியை அழைத்து விசாரித்தனர். அதில், பார்சலில் இருப்பது ஏர்கன் துப்பாக்கி எனவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் இருந்து சண்டிகாருக்கு ரெயிலில் செல்ல வேண்டிய துப்பாக்கி, தவறுதலாக சென்னைக்கு வந்ததாகவும், எனவே அதை மீண்டும் டெல்லிக்கு விமானத்தில் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் துப்பாக்கியை விமானத்தில் பார்சலில் அனுப்புவது தவறு என்பதால் விமான நிறுவன அதிகாரிகளின் புகாரின் பேரில் துப்பாக்கி பார்சலை அனுப்பிய தனியார் கூரியர் நிறுவன அதிகாரியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை ஆய்வுக்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு அறிக்கை வந்ததும் மேல் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. வடலூரில் பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம் ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் பரபரப்பு தகவல்கள்
வடலூரில் ரவுடி பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் 4 பேர் பிடிபட்டனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலக்கரி பெட்டியில் 2-வது நாளாகவும் புகை வந்ததால் பரபரப்பு
ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலக்கரி பெட்டியில் 2-வது நாளாகவும் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அவசரமாக இறங்கிய போது தவறி விழுந்தார்: ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி போராடிய பெண் சுவரை உடைத்து மீட்டதால் பரபரப்பு
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து அவசரமாக இறங்கியதால் தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி போராடிய பெண் உயிருடன் மீட்கப்பட்டார். சுவரை உடைத்து அவரை மீட்டதால் மதுரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
4. மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன்: ஓட்டுக்காக இந்தியை எதிர்க்கின்றனர் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
ஓட்டுக்காக இந்தி மொழியை எதிர்க்கின்றனர் என்றும், மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன் என்றும் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு; கண்டமங்கலம் அருகே ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை
கண்டமங்கலம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வுப் பணிக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.