மாவட்ட செய்திகள்

பொன்னேரியில் விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் + "||" + Ponneri in the Farmers to ID cards

பொன்னேரியில் விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள்

பொன்னேரியில் விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள்
பொன்னேரியில் வேளாண்மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது.
பொன்னேரி,

பொன்னேரியில் வேளாண் மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் 29 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் 40 வயது வரை செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகை அடிப்படையில் அரசு பங்களிப்பு வழங்கும். 60 வயது அடைந்த பின்னர் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இறப்புக்குப் பின் குடும்பத்திற்கு பாதி ஓய்வுதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது தங்களின் ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.

இந்த முகாமில் வேளாண் மை அலுவலர் டில்லிகுமார், துணை வேளாண்மை அலுவலர் நாயகம், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஐஸ்வர்யா, சிவலிங்கம், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னேரியில் நிலத்தடி நீர் திருட்டு; 14 ஆழ்துளை கிணறுகள் அகற்றம் வருவாய்த்துறையினர் நடவடிக்கை
பொன்னேரியில் நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக 14 ஆழ்துளை கிணறுகள் அகற்றப்பட்டன.
2. திண்டிவனத்தில் விவசாயிகளுக்கு ரூ.19 லட்சம் சொட்டுநீர் பாசன திட்ட கருவிகள் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் வழங்கினார்
திண்டிவனத்தில் மானிய விலையில் 22 விவசாயிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசனத்திட்ட கருவிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் வழங்கினார்.
3. மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை தூர்வார விவசாயிகளுக்கு கலெக்டர் அனுமதி
மாமல்லபுரம் சோழி பொய்கைகுளத்தை தூர்வார விவசாயிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்து உள்ளார்.
4. பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
பொன்னேரியில் நிலமோசடியை தடுக்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.