மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பி கைது + "||" + Akkal-Thambi arrested for robbing a financial house in Mannargudi

மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பி கைது

மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பி கைது
மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி,

மன்னார்குடி பூக்கொல்லை ரோடு குழந்தையேசு கோவில் பகுதியில் வசித்து வருபவர் லிக்மிசந்த் (வயது57). இவர் நான்கு சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். அப்போது வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், டி.வி. மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு வெளியே வந்த போது அக்கம் பக்கத்தினர் அவர்களை பார்த்து திருடன், திருடன் என சத்தம் போட்டனர்.இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அக்காள்-தம்பி கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மன்னார்குடியில் சுற்றித் திரிந்த பெண் மற்றும் ஒரு வாலிபரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்த வசந்தி( 26), திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்த சித்தமல்லி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் ( 20 ) என்பதும் அக்காள் ,தம்பியான இவர்கள் தான் பைனான்சியர் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.