மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி + "||" + Bus-car collision near Mamallapuram, From Chennai 2 people Kills

மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி

மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி இ.சி.ஆர். சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் புதுச்சேரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் கார் நொறுங்கி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

காரில் பயணம் செயத சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27), சூரியராஜன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் பயணம் செயது காயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ராஜ்குமார், சூரியராஜன் ஆகியோரது உடல்கள் பிரேத பிரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்
திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று செயல்படும் : ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
3. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்றும் (வியாழக்கிழமை) மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. மாமல்லபுரம் ஒரு உயிர் துடிப்பு மிக்க ஊர் -மோடி தமிழில் டுவிட்
மாமல்லபுரம் ஒரு உயிர் துடிப்பு மிக்க ஊர் என பிரதமர் மோடி தமிழில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி
மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.