மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் + "||" + Exceeding 130 feet Water level of Mullaperiyar dam

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது.
தேனி,

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடியாகும். ஆனால், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்த அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 8, 9-ந்தேதிகளில் பெய்த பலத்த மழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த 2 நாட்களாக மழைப் பொழிவு குறைந்துள்ளது. பலத்த மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 129.60 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3,729 கன அடியாக இருந்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், நேற்று காலை 6 மணி நிலவரப்படி முல்லைப்பெரியாறு பகுதியில் 5.4 மி.மீ. மழையும், தேக்கடியில் 3.6 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 130 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,404 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 4,697 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 130.10 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யும்பட்சத்தில் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர வாய்ப்பு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. முல்லைப்பெரியாறு அணையில் திறக்கும் தண்ணீர் அளவு குறைப்பு: கல்லூரி மாணவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து 3-வது நாளாக கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2. முல்லைப்பெரியாறு அணையில், துணை கண்காணிப்பு குழுவினர் மதகை இயக்கி சோதனை
முல்லைப்பெரியாறு அணையில் மதகை இயக்கிப் பார்த்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். வல்லக்கடவு பாதையில் உள்ள பாலம் சீரமைப்பு குறித்து இருமாநில அதிகாரிகள் காரசார விவாதம் நடத்தினர்.
3. முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரிக்கவேண்டும்
முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயில் உள்ள செடி,கொடிகளை அகற்றி, சேதமடைந்த கரைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. தொடர் நீர்வரத்து எதிரொலி, வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக நீடிப்பு
தொடர் நீர்வரத்து எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக நீடித்து வருகிறது.
5. கீழணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வருகிறது, வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்வு
கீழணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.80 அடியாக உயர்ந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடன் இன்று ஆலோசனை நடக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...