மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் படகுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் சோதனை + "||" + Coast Guard inspecting boats at Thoothukudi

தூத்துக்குடியில் படகுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் சோதனை

தூத்துக்குடியில் படகுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி தூத்துக்குடியில் படகுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி,

இந்திய சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் முழுமையான சோதனை செய்யப்பட்டன. விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் டொமிலன் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் சென்று மீன்பிடி படகுகளிலும் சோதனை நடத்தினர். மீனவர்களிடம் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து தீவு பகுதிகளுக்கு சென்றும் கண்காணித்தனர்.