மாவட்ட செய்திகள்

சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் + "||" + Truck collision on van near Sulagiri; 6 women killed, 2 women injured

சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்

சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள். மேலும் டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெண்ணேர்கட்டா அருகில் உள்ள அரிக்கெரே பி.டி.எஸ் லேஅவுட் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 40). இவரது கணவர் உமேஷ். வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் மகேஷ் என்பவரது மனைவி அம்பிகா(35).

இந்த நிலையில் ஹேமலதா மற்றும் அம்பிகா ஆகிய இருவரும் தங்களது உறவினர்களான சர்வமங்களா(48), சுமித்ரா(45), வித்யா(25) மற்றும் லதா(38) ஆகியோருடன் ஒரு ஆம்னி வேனில், பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு சென்றனர். வேனை டிரைவர் நாகபூஷணம்(50) என்பவர் ஓட்டி சென்றார். கிரிவலத்தை முடித்து நள்ளிரவில் அவர்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி என்ற இடத்தில் நேற்று அதிகாலை வேன் வந்த போது, பின்னால் வந்த ஒரு கன்டெய்னர் லாரி, வேனின் பின்புறம் மோதியது. இதில் காரின் பின்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

2 பெண்கள் பலி

இந்த விபத்தில் ஹேமலதா மற்றும் அம்பிகா பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் விபத்தில் டிரைவர் நாகபூஷணம் மற்றும் சர்வமங்களா, சுமித்ரா, வித்யா, லதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியும் சாலையில் கவிழ்ந்தது.

இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஏட்டுராஜ் (32) என்பவருக்கும் கால் முறிந்து படுகாயம் ஏற்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் இருந்து மருந்து பொருட்கள் பாரத்தை கன்டெய்னர் லாரியில் பெங்களூரு நோக்கி கொண்டு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது, கார் விபத்துக்குள்ளாகி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம்; 25 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்
ஜப்பான் நாட்டில் ‘ஹிகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2. கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ - வாலிபர் பலி: தீயணைப்பு வீரர்கள் காயம்
கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வாலிபர் பலியானார். தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
3. மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; கல்லூரி மாணவர் பலி தாயாருக்கு தீவிர சிகிச்சை
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். உடன் வந்த தாயாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி
கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியானார்.
5. தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலி
தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலியானார்.

ஆசிரியரின் தேர்வுகள்...