மாவட்ட செய்திகள்

அத்தாணியில் குடிநீர் சீராக வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road stir to demand uniform supply of drinking water

அத்தாணியில் குடிநீர் சீராக வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

அத்தாணியில் குடிநீர் சீராக வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
அத்தாணியில் குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சி பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, மேல்நிலை தொட்டியில் ஏற்றி குழாய் வழியாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேரூராட்சிக்கு உட்பட்ட 5, 6, 7, 8, 9, 11-வது வார்டு பொதுமக்களுக்கு கடந்த 5 நாட்களாக தண்ணீர் வினியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் தண்ணீர் வழங்கப்படாத வார்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 11.15 மணி அளவில் அத்தாணி மூனு ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் அத்தாணி பேரூராட்சி செயல் அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ‘பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. அதனால் நீர் உறிஞ்சும் இடத்தில் குழாயில் சேறு அடைத்துவிட்டதால் தான் தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. உடனே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்‘ என்று உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு பகல் 11.45 மணி அளவில் கலைந்து சென்றார்கள்.

இந்த சாலை மறியலால் அத்தாணி மூனு ரோடு வழியாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கடைகள் மதியம் 2.30 மணிக்கு அடைப்பு: மளிகை பொருட்களை வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள்
கடைகள் மதியம் 2.30 மணிக்கு அடைக்கப்படுவதால் கரூரில் மளிகை பொருட்களை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
2. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
3. பெராம்பட்டு- கீழகுண்டலபாடி இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும்பணி அதிகாரி ஆய்வு
பெராம்பட்டு- கீழகுண்டலபாடி இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
4. டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து சாலை மறியல்
டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. வையம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
வையம்பட்டி அருகே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.