மாவட்ட செய்திகள்

இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை + "||" + Woman lawyer commits suicide at 6 months of marriage

இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை

இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை
திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கூத்தணி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். அவருடைய மகள் வினோதினி (வயது 26). வக்கீலான இவருக்கும், இளையான்குடி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் கண்ணன்(31) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வினோதினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பன்னீர்செல்வம் இளையான்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளையான்குடி அருகே குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை அறையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு; பெண்கள் உள்பட 20 பேர் மீது வழக்கு
இளையான்குடி அருகே நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை சிறை பிடித்து அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி சென்றனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2. குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இளையான்குடி-தாயமங்கலம் சாலையை செப்பனிட வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்
குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இளையான்குடி-தாயமங்கலம் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
3. இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வரும் அவலம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இளையான்குடியில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருவதால் அவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4. இளையான்குடி அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
இளையான்குடி அருகே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.