மாவட்ட செய்திகள்

கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம் + "||" + Ellambalur Government School tops the list of students aged 14 and 19 in the football competition

கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம்

கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம்
பெரம்பலூர் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கால்பந்து போட்டி பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகளும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடம் பிடித்தன.

பரிசளிப்பு விழா

14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் பெரம்பலூர் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடவுள்ளனர். வருகிற 26-ந்தேதி 14, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்
ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது 16 வயது வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.
2. கால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை
கால்பந்து போட்டியில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி இடம் பிடித்துள்ளார்.
3. கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ
கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை யுவான்டஸ் ஸ்ட்ரைக்கரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான ரொனால்டோ பெற்றுள்ளார்.
4. ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது; மன ரீதியாக தயாராக வேண்டும்-லியோனல் மெஸ்சி
லியோனல் மெஸ்சி லா லிகாவுக்கு போட்டிக்காக காத்திருக்கிறார், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதில் அவர் விருப்பம் கொண்டுள்ளார்.
5. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.