மாவட்ட செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது + "||" + Near Kottakkuppam Car hijacking Confiscation of alcoholic beverages Driver arrested

கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது

கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், 

கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் தனிப்படை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் செந்தில்குமார், ராஜசெல்வம், ராஜேந்திரன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 30 அட்டைப்பெட்டிகளில் 1,440 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் வேதவள்ளி தெருவை சேர்ந்த சேகர் மகன் வெங்கடேஷ் (வயது 29) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது
சேலத்தில் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர்.
2. சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் 6 பேர் கைது
ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கில் வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
4. கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது
கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.
5. கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏமாற்றியதாக புகார்: எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது
கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில் எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.