மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு; 24 பேர் மீது வழக்கு பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை + "||" + Disruption to passengers on a running train; Police action against 24 persons

ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு; 24 பேர் மீது வழக்கு பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை

ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு; 24 பேர் மீது வழக்கு பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை
ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக 24 பேர் மீது தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர்,

ரெயில்களில் சிலர் படிக்கட்டுகளில் நின்று பயணிகளுக்கு இடையூறு செய்வதாகவும், புகை பிடிப்பதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மண்டல ரெயில்வே போலீஸ் கமிஷனர் எம்.எப்.மொய்தீன் உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ரெயில்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் திருச்சி- காரைக்கால், தஞ்சாவூர் - திருச்சி இடையே இயக்கப்படும் ரெயில்கள் உள்பட பல்வேறு ரெயில்களில் விதிமுறைகளை மீறி யாராவது பயணம் செய்கிறார்களா? என சோதனை மேற்கொண்டனர்.

இதில் படிக்கட்டில் பயணம் செய்தல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், ரெயிலுக்குள் புகை பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல் களில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த காமராஜ் (வயது 45), திருவிடை மருதூரை சேர்ந்த கார்த்திக் (20) உள்ளிட்ட 24 பேரை போலீசார் பிடித்தனர்.

ரூ.7,700 அபராதம்

பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மொத்தம் ரூ.7,700 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 24 பேரையும் கடும் எச்சரிக்கைக்கு பிறகு போலீசார் அனுப்பி வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது - கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து
அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மலேரியா மருந்து கொடுத்து சோதிக்கப்பட உள்ளது.
2. நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்
நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்.
3. பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. தமிழகத்தை சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்க கிராமப்புற சாலைகளுக்கும் சீல் வைப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் நுழைவதை தடுக்க கிராமப்புற சாலைகள் மூடப்பட்டன.
5. உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி - சோதனை புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு சீல்
ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.