மாவட்ட செய்திகள்

தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் - சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பேட்டி + "||" + To raise the economy of Tamil Nadu First - Minister Foreign Tour

தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் - சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் - சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பேட்டி
தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.
சிதம்பரம்,

சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று மதியம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி போன்ற ஆறுகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுப்படி இந்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக அரசு 40 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் இடைவிடாமல் கொடுக்க வேண்டும். தமிழக பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

முன்னதாக ஜி.கே.வாசன் திட்டக்குடி அருகே ஆவினங்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையை பொறுத்தவரை மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை கல்வித்துறை அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறையின் நல்ல திட்டங்களுக்கு ஏதுவாக தனியார் துறையும் அரசுடன் இணைந்து குழந்தைகளுடைய வருங்கால வளர்ச்சிக்கு உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

கல்வி சாலைகளை கிராமப்புறங்களில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், ஆவினங்குடி போன்ற கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் அரசு மற்றும் கல்வித்துறை உதவிகரமாக செயல்பட வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இயக்கத்தை பலப்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் அனைத்து மாவட்டங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்ய தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
2. கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் இழப்பவர்களுக்கான நிதி உதவியை, ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிப்பு: “மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
4. கொரோனா தடுப்புக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தடுப்புக்கு பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் குறைப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கால அளவு மதியம் 1 மணி என குறைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை