மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல் + "||" + Up to plus-2 50% seats in colleges will be allotted to those studying in government schools - Assembly Information

பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்

பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்
பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

*காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் எம்.பி.ஏ. (சுற்றுலா மேலாண்மை) பிரிவு தொடங்குவதற்கான செயற்குறிப்பு அரசின் கருத்துரு உள்ளது.

*பல்கலைக்கழக மானியக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் வேலைவாய்ப்புகள் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்கப்படும்.

*ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் பணி ஊதியத்துடன் குறுகிய கால ஒப்பந்தத்தின்பேரில் நிரப்பப்படும்.

*அரசு பள்ளிகளில் பிளஸ்-2 வரை படித்த மாணவர்களுக்காக அனைத்து அரசு கல்லூரிகளிலும் 50 சதவீத சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

*பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டம் அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வரையறை செய்யப்படும். மற்ற மாணவர்களுக்கு வருவாய் அளவுகோல் நிர்ணயிக்கப்படும்.

*அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

*தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 44 தீயணைப்பு வீரர்கள், 5 டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

*மணிலா சாகுபடியாளர்களுக்கு செலவின மானியம் ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும்.

*அனுமதியின்றி குழாய் கிணறுகளை பயன்படுத்தினால் முதல் முறையாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

*நடப்பாண்டில் 60 மின்மாற்றிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் சட்டசபைக்கு வெங்காய மாலை அணிந்து வந்த எம்.எல்.ஏ.
பீகாரில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ. ஒருவர் வெங்காய மாலை அணிந்து வந்தார்.
2. முதல்வர் பதவியில் உறுதியாக உள்ளோம் : சிவசேனா மீண்டும் திட்டவட்டம்
முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று சிவசேனா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
3. ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்
ஆந்திர பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேரை அரசு பள்ளியில் சேர்க்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்துள்ள 3 பேருக்கு அரசு பள்ளியில் சேர இடமளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. கேரளாவில் சட்டசபை இடைத்தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றி
கேரளாவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றது.