மாவட்ட செய்திகள்

50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம் + "||" + 50th Anniversary Happy Birthday: Sonia Gandhi congratulates Namachchivayam

50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்

50-வது ஆண்டு பிறந்தநாள் பொன் விழா: நமச்சிவாயத்துக்கு சோனியா காந்தி வாழ்த்து; நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வில்லியனூர்,

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு நேற்று 50-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி மாநிலம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காங்கிரஸ் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டும், விதவிதமான கட் அவுட்டுகள் வைத்தும் காங்கிரஸ் கட்சியினர் விழா கொண்டாடினார்கள்.

பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் முக்கிய இடங்களில் விழா ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் புதுவை முழுவதும் ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் விழா கொண்டாடினார்கள். இந்த விழாக்களில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி புதுவையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பில் அதன் நிர்வாகிகள் நமச்சிவாயத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ரூபாய் நோட்டு, மலர் மாலை, பூச்செண்டு, பொன்னாடை அணிவித்தும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி புதுவை மாநிலமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

டெல்லியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர்கள் குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக், மகளிர் காங்கிரஸ் செயலாளர் நக்மா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்தநாள் வாழ்த்து தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்த ரங்கசாமி
கொரோனா அச்சுறுத்தலையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தொண்டர்களை சந்திப்பதை ரங்கசாமி தவிர்த்தார்.
2. லடாக்கில் இந்திய பகுதியில் சீன ராணுவம் எப்போது ஊடுருவியது? சோனியா காந்தி கேள்வி
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார்
3. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
4. கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
5. 68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்
மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினர்.