மாவட்ட செய்திகள்

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு + "||" + Near Nagai Drowning in the pool The boy dies

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
நாகப்பட்டினம்,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வாஹித் ஹூசைன். இவருடைய மகன் அப்துல் சுக்கூர் (வயது 11). வாஹித் ஹூசைனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நாகை பாப்பாக்கோவிலில் உள்ள தர்காவில் தங்கி, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். தந்தையுடன் சிறுவன் அப்துல் சுக்கூர் தங்கி இருந்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தர்கா அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து வருவதற்காக அப்துல் சுக்கூர் சென்றபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல் சுக்கூரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.