மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து + "||" + School students in Nagercoil Clash; Shout to someone

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிந்து அனைவரும் வெளியே வந்தபோது, அந்த பள்ளிக்கு எதிரே உள்ள தெருவில் மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து மோதிக்கொண்டனர்.

அதில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் சிலர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவனை குத்தி விட்டனர்.

3 பேர் மீது வழக்கு

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் பிளஸ்-2 படித்து வந்தவர்கள் என்பதும், புளூடூத் ஸ்பீக்கர் கொடுக்கல்-வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில், மோதல் சம்பவம் நடந்ததாகவும் தெரியவந்தது.

இதுதொடர்பாக 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை, சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து பரப்பினர். இதனால் மாணவர்கள் மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராமநத்தம் அருகே மின்கம்பத்தில் கார் மோதல்; மின்வாரிய பெண் அதிகாரி பலி
ராமநத்தம் அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் மின்வாரிய பெண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
2. சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மற்றொரு வேன் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி
காவேரிப்பாகம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மோதியது. இதில், டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
3. வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: வேன்-பஸ் மோதல்; 7 பேர் படுகாயம்
வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது, வேலாயுதம் பாளையம் அருகே வேன்-பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படு காயம் அடைந்தனர்.
4. மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; ஆசிரியை பலி தங்கை படுகாயம்
மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் ஆசிரியை பரிதாபமாக பலியானார். அவரது தங்கை படுகாயம் அடைந்தார்.
5. உறவினருக்கு பெண் பார்க்க சென்றபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தி.மு.க. நிர்வாகி பலி
உறவினருக்கு பெண் பார்க்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தி.மு.க. நிர்வாகி பலியானார்.