மாவட்ட செய்திகள்

தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை: கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது + "||" + Heavy rains in Dharagampatti area: The water surrounded the Kadavur Taluk office

தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை: கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது

தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை: கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது
தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது.
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவில் தரகம்பட்டி, கடவூர், பாலவிடுதி, மஞ்சாநாயக்கன்பட்டி, பண்ணபட்டி, கொசூர் உட்பட 23 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி வானம்பார்த்த பூமியாகவே உள்ளது. மழை பெய்தால்தான் விவசாயம் செய்யமுடியும். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர மழை பெய்யாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மானாவாரி பயிர் சாகுபடி செய்ய முடியாமல் போனது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விவசாயம் இல்லாமல் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் போனது.

பலத்த மழை

கடுமையான வறட்சியில் இருந்த மக்களுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால், விவசாய நிலங்கள், வாரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் இந்தபகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் தரகம்பட்டியில் உள்ள கடவூர் தாலுகா அலுவலக வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மழை காலத்தில் தாலுகா அலுவலக வளாகத்தின் உள்ளே தண்ணீர் தேங்காமல் இருக்க மண்திட்டு அமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்த கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 3–வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
2. அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. திருவாரூரில் 4 நாட்களாக தொடர் மழை: 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது
திருவாரூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. வாய்க்கால்களை தூர்வாராததே பயிர்கள் மழைநீரில் மூழ்கியதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
5. புங்கனூர் பகுதியில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
புங்கனூர் பகுதியில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வடிகால் வாரி ஆக்கிரமிப்பு தான் இதற்கு காரணம் என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.