மாவட்ட செய்திகள்

பேனர் கலாசாரத்தை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி + "||" + Thirumavalavan MP in Trichy to implement separate law to ban banner culture Interview

பேனர் கலாசாரத்தை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி

பேனர் கலாசாரத்தை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி
பேனர் கலாசாரத்தை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சியில் திருமாவளவன் எம்.பி. கூறினார்.
செம்பட்டு,

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது ஏழை, எளிய பள்ளி மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் வெளியேற்றுவதற்கான முயற்சி. இந்த முயற்சிக்கு தமிழக அரசு துணைபோவது வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே மொழி என்பதெல்லாம் பா.ஜ.க.வின் நீண்ட நாளைய கனவு. இது இந்தியாவை துண்டாடும் ஒரு முயற்சி. ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்பதை முன்மொழிந்து இருக்கிறார்கள். இந்த ஆபத்தான போக்கு இந்திய தேசத்தை பல கூறுகளாக சிதறடிக்கும். தமிழகத்தில் சுபஸ்ரீ மரணத்துக்கு பிறகு, பேனர் வைப்பதில்லை என்ற முடிவை தி.மு.க. உள்பட தோழமைக்கட்சிகள் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

பேனர் கலாசாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கருத்தினை நீண்டகாலமாக சொல்லி வருகிறது. அரசியல் நிகழ்ச்சிகளுக்காக பிரமாண்டத்தை உருவாக்க வேண்டும் என்ற பெயரில் 100-க்கணக்கான பேனர்களை வைப்பது கலாசாரமாக மாறி இருக்கிறது. இதில் ஆளும் கட்சிக்கு ஒரு அணுகுமுறை, மற்ற கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என காவல்துறை நடந்து வருகிறது.

பேனர் வைக்கும் கலாசாரத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். ரேஷன் கடை என்ற பொது வினியோக திட்டத்தை அழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பொருளாதார கொள்கையை வகுத்து அதன் விளைவாக ஏற்படக்கூடிய பின்விளைவுகள் தான் இதுபோன்ற செயல்பாடுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனாவால் பலியானவர்களின் இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2. ‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி
கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன் என சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யா தெரிவித்தார்.
3. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
4. கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
கொரோனா தடுப்பு மருந்தை எப்போது கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி.