மாவட்ட செய்திகள்

திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + "||" + A large number of pilgrims attended the Thimmachipuram Kanakadoni Amman Temple

திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே திம்மாச்சிபுரத்தில் புகழ்பெற்ற கனக தோணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் தேரோட்டம் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முதலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கனகதோணி அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.

அப்போது வீடுகளின் முன்பு பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஒவ்வொரு வீதியிலும் கனகதோணி அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீசார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு - நள்ளிரவு 1½ மணி நேரத்தில் விழா முடிந்தது
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே அம்மன்சிரசு சுற்றிவந்து நள்ளிரவு 1½ மணி நேரத்தில் விழா முடிந்தது.
2. ‘கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
4. திருமுருகன்பூண்டியில் 2-வது நாள் தேரோட்டம் இன்று தெப்பத்திருவிழா
திருமுருகன்பூண்டியில் 2-வது நாளாக நடைபெற்ற தேரோட்டத்தில் பெண்கள் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
5. தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம்
தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.