மாவட்ட செய்திகள்

தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி + "||" + The awfulness near the bar: Army soldier dies in motorcycle collision with friend

தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி

தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி
தா.பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பருடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ஒட்டம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கவுதம் (வயது 30). இவர் மத்தியபிரதேச மாநிலத்தில் ராணுவத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் 15 நாட்கள் விடுமுறை எடுத்த கவுதம், நேற்று துறையூருக்கு வந்தார்.

அங்கிருந்து ஒட்டம்பட்டிபுதூருக்கு செல்ல பஸ் இல்லாததால், தா.பேட்டை வாணியர் தெருவில் வசித்து வந்த தனது நண்பர் கிருஷ்ணமூர்த்தியின்(28) வீட்டுக்கு கவுதம் சென்றார். பின்னர், அவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கரிகாலியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கவுதம் புறப்பட்டார்.

2 பேர் பலி

கவுதம் மோட்டார் சைக்கிளை ஓட்ட கிருஷ்ணமூர்த்தி பின்னால் உட்கார்ந்து இருந்தார். மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையோரம் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான 2 பேருக்கும் இன்னும் திருமணம்ஆகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயங்கொண்டம் அருகே, கார் மோதி கல்லூரி பேராசிரியை பலி
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி கல்லூரி பேராசிரியை பலியானார். இதனால் அவரது 8 மாத பெண் குழந்தை தவித்து வருகிறது.
2. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
4. வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்
இண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. எட்டயபுரம் அருகே,லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் பண்ருட்டியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.