மாவட்ட செய்திகள்

பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு + "||" + Theft of money at the Dravupadiyamman temple near Pennadam

பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கதவு பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர்.

வலைவீச்சு

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. பண்ருட்டியில், தையல் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியர் கைது - 25 பவுன் நகைகள் மீட்பு
பண்ருட்டியில் தையல் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
3. கடலூரில், அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடலூரில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
கீழ்கட்டளையில், வீடு புகுந்து 18 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. வத்தலக்குண்டு அருகே, கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது
வத்தலக்குண்டு அருகே கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.