மாவட்ட செய்திகள்

பள்ளி இடத்தில் கோவில் கட்ட பூஜை: ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகை + "||" + To build a temple in the school premises: Women blockade the occupants of the occupation

பள்ளி இடத்தில் கோவில் கட்ட பூஜை: ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகை

பள்ளி இடத்தில் கோவில் கட்ட பூஜை: ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகை
கந்தர்வகோட்டை அருகே பள்ளி இடத்தில் கோவில் கட்ட கிராமமக்கள் பூஜை செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் ராஜபகதூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்ட கிராம மக்கள் பூஜை போட்டனர். இந்நிலையில் பள்ளிக்கூட இடத்தில் கோவில் கட்டப்படுவதால் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, பள்ளி இடத்தில் கோவில் கட்ட அனுமதியில்லை, எனவே உடனடியாக பள்ளி இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று புதுக்கோட்டை தாசில்தார் பரணிக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை புதுக்கோட்டை தாசில்தார் பரணி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜபகதூர் கிராமத்திற்கு சென்றனர்.

அதிகாரிகளை முற்றுகை

அங்கு கோவில் கட்ட பூஜை செய்த இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, ‘இந்த இடத்தில்தான் எங்களை அம்மன் கோவில் கட்ட கூறியுள்ளது. இங்குதான் கோவில் கட்டுவோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள், அரசு இடத்தில் கோவில் கட்ட அனுமதியில்லை. எனவே இன்னும் 2 நாட்களில் பூஜை செய்யப்பட்ட செங்கல் மற்றும் பொருட்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்களே அகற்றுவோம் என்று கூறிவிட்டு சென்றனர்.

இது குறித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் கூறுகையில், சாமி சொல்லிய இடத்திலேயே நாங்கள் கோவிலை கட்டுவோம். இல்லையென்றால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்போம், என்று கூறினார்கள். இந்த சம்பவத்தால் நேற்று ராஜபகதூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
தடிக்காரன்கோணம் ஊராட்சியில் அரசு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
2. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
3. சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோவில் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்கள் கைது
சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
4. பெண்களுக்கான தடை நீங்குமா? தொடருமா? - சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு
பெண்களுக்கான தடை நீங்குமா அல்லது தொடருமா என்பது குறித்து சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
5. வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.