மாவட்ட செய்திகள்

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு + "||" + Collector Study of Integrated Service Center Functions for Women

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு
மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,

மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையம் தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும், மருத்துவ ரீதியான உதவிகளையும், காவல் துறை ரீதியான உதவிகளையும், அவசர நடவடிக்கை சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கை உடனடியாக பெறும் வகையில் இச்சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தின் செயல்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.
3. வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பு கலெக்டர் தகவல்
வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
4. கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை
கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் பதுக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற் கொண்டனர்.
5. 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.