மாவட்ட செய்திகள்

கோத்தகிரி அருகே, பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி + "||" + Near Kotagiri Woman killed for swine flu

கோத்தகிரி அருகே, பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி

கோத்தகிரி அருகே, பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி
கோத்தகிரி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன்(வயது 42). அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பவீனா(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவீனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கோத்தகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பவீனா கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது, பவீனாவுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பவீனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, மேற்பார்வையாளர் சந்திரன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் கன்னேரிமுக்கு பகுதிக்கு சென்று சுகாதார பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதேபோன்று பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்த பவீனாவின் வீட்டிலும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமாக காய்ச்சல்களுக்கும் மருந்து உள்ளது. எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் தாமதிக்காமல் உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓசூரில் கொரோனாவுக்கு பெண் பலி
ஓசூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சேலம் தனியார் மருத்துவமனையில் இறந்தார்.
2. கணவர் கண் எதிரே பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
3. கெங்கவல்லி அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 39 பேர் படுகாயம்
கெங்கவல்லி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். மேலும் இந்த விபத்தில் 39 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
4. படப்பை அருகே, வீட்டில் காலி கேனில் இருந்த ரசாயன பொருள் வெடித்து பெண் பலி - போலீசார் விசாரணை
படப்பை அருகே வீட்டில் காலி கேனில் இருந்த ரசாயன பொருள் திடீரென வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மீஞ்சூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். சாலையை சீரமைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.