மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல் + "||" + Collector Uma Maheshwari informed of 1 year imprisonment for placing ad banners without permission

அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனுமதியின்றி விளம்பர தட்டி, பதாகைகள் வைப்பவர்கள் மீதும், விதி மீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விளம்பர தட்டிகள், பதாகைகள் நிறுவ அனுமதி விதிகள், 2011 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920-ன்படி, கல்வி நிறுவனங்கள் முன்பு, கோவில்கள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைபிரிவு கொண்ட மருத்துவமனைகள் முன்பு, சாலை அல்லது தெரு சந்திப்புகளின் இருபுறமும் 100 மீட்டர் தூரத்திற்குள் மற்றும் சிலைகள் அல்லது நினைவு சின்னங்கள் முன்பாகவும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் விளம்பர தட்டிகள், பதாகைகள் வைக்கக்கூடாது.

ஒரு ஆண்டு சிறை தண்டனை

அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதிகளுக்கு உட்பட்ட அளவுகளில் மட்டுமே விளம்பர தட்டிகள், பதாகைகள் அமைக்க வேண்டும். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர தட்டிகள், பதாகைகளை உரிய அலுவலர்கள் அகற்றி அதற்கான தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும்.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு சட்டம் 2011-ல் 2, சேர்க்கை பிரிவு 285-ஐ மற்றும் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம், தமிழ்நாடு சட்டம் 2000 இல் 26 இன்படி, உரிய அலுவலரிடம் இருந்து அனுமதி பெறாமல் விளம்பர தட்டிகள், பதாகைகள் வைப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.28 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்
திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
2. குடியரசு தின விழா கொண்டாட்டம் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
புதுக்கோட்டையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்.
4. தென்காசியில் நாளை குடியரசு தின விழா கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றுகிறார்
தென்காசயில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றுகிறார்.
5. கடலூரில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
கடலூரில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.