மாவட்ட செய்திகள்

மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி + "||" + The roof of the house in the mud Woman killed by falling

மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி

மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி
மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
பிராட்வே,

சென்னை மண்ணடி அய்யப்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெரினாபானு (வயது 45). இவர், அப்பகுதியில் தனது தாயார் வசந்தா மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அதிகாலை 4.30 மணி அளவில் ஜெரினாபானு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஜெரினா பானுவின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உயிர் தப்பினர்

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜெரினாபானுவுடன் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய தாயார், மகன் மற்றும் மகள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எஸ்பிளனேடு போலீசார், பலியான ஜெரினா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
புதுச்சத்திரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
2. மகன்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்ட பெண் அடித்து கொலை அவினாசி அருகே பயங்கரம்
அவினாசி அருகே கிரிக்கெட் விளையாட்டின்போது மகன்களை தாக்கியவர்களை தட்டி கேட்க சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.
3. பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்த விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பலியானார். அவருடன் சென்ற மற்றொரு செவிலியர் படுகாயம் அடைந்தார்.
4. தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்
தாரமங்கலம் அருகே மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
5. சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.