மாவட்ட செய்திகள்

மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது + "||" + Seven persons arrested in Manamadurai bank robbery attempt

மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது

மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது
மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன். இவர் கடந்த மே மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆவரங்காட்டையை சேர்ந்த தங்கமணி (வயது 42) சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 18-ந் தேதியன்று தன்னுடைய நண்பர் கணேசுடன் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை மரக்கடை வீதியில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்கள், அவர்களை துரத்தினர்.

அப்போது உயிர் தப்புவதற்காக 2 பேரும் அருகில் உள்ள ஒரு அரசு வங்கிக்குள் புகுந்தனர். ஆனால் அந்த கும்பல் விடாமல் இருவரையும் துரத்தி சென்று வங்கிக்குள் புகுந்து வெட்டினர். இதைப்பார்த்த வங்கி காவலாளி செல்லநேரு, துப்பாக்கியால் சுட்டு அந்த கும்பலை விரட்டியதால் தங்கமணி, கணேஷ் உயிர்தப்பினர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த கும்பலை போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊமைத்துரை (57), பூமிநாதன் (38), மச்சம் (60), முருகன் (44), சலுப்பனோடையை சேர்ந்த தங்கராஜ்(40), மச்சக்காளை (49), பிச்சைப்பிள்ளையேந்தலைச் சேர்ந்த முத்துசெல்வம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் : சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் விதித்த சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
3. ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு: சேலத்தில் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது
ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறித்த கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4பேரை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.
4. கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5. குமாரபாளையத்தில் வாலிபரிடம் வழிப்பறிக்கு முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது
குமாரபாளையத்தில், கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.