மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் நடந்த தென்மாநில டென்னிஸ் போட்டியில் சென்னை அணி முதலிடம் போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார் + "||" + Chennai Super Team wins first place superstar tennis match at Nagercoil

நாகர்கோவிலில் நடந்த தென்மாநில டென்னிஸ் போட்டியில் சென்னை அணி முதலிடம் போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்

நாகர்கோவிலில் நடந்த தென்மாநில டென்னிஸ் போட்டியில் சென்னை அணி முதலிடம் போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்
நாகர்கோவிலில் நடந்த தென்மாநில டென்னிஸ் போட்டியில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிசு வழங்கினார்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பயோனியர் குமாரசாமி சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் தென் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி ஒழுகினசேரியில் உள்ள தனியார் டென்னிஸ் கிளப்பில் நடந்தது. போட்டியில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலத்தில் இருந்தும் அந்தமான் நிக்கோபாரில் இருந்தும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என ஒரு பிரிவாகவும், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

சென்னை அணி முதலிடம்

போட்டிகளுக்கான இறுதி சுற்று போட்டி பயோனியர் குமாரசாமி சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இறுதி சுற்று போட்டியில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சென்னை கோல்டன் கேட் வித்யாலயா பள்ளியும், 2-ம் இடத்தை கரூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், பெண்களுக்கான பிரிவில் முதலிடத்தை சென்னை எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியும், 2-வது இடத்தை சேலம் எமரான்ல்டு வேலி பப்ளிக் பள்ளியும் பிடித்தன. இதேபோல் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசை சேலம் எமரான்ல்டு வேலி பப்ளிக் பள்ளி அணியும், 2-ம் பரிசை கோவை பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளி அணியும், பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை ஐதராபாத் ஒகரிஜ் இன்டர்நேஷனல் பள்ளியும், 2-ம் பரிசை வேலூர் வித்யாலயா பள்ளியும் பெற்றன.

பரிசு

இதைத்தொடர்நது பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் லதா குமாரசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

முன்னதாக தலைமையாசிரியை திலகா அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் மூத்த நிர்வாக அதிகாரி குமாரசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டி: கமலா ஹாரிசை வாழ்த்திய பிரியங்கா சோப்ரா
அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய பெடரரின் யோசனைக்கு முன்னணி வீராங்கனை ஆதரவு
ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய இது சரியான நேரம் என பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் கருத்துக்கு முன்னணி வீராங்கனை ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை